
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இன்பத்தைப்போல துன்பமும் கடவுளின் வரப்பிரசாதமே. அதன் மூலமும் கடவுள் நமக்கு கருணையே புரிகிறார்.
* கடவுள் எப்போதும் உன் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு செயல்படு. வெற்றி பெறுவாய்.
* மனிதப் பிறவியைப் பெறுவதற்கு நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் என்பதை மறவாதே.
* வேலையின்றி சும்மா இருக்காதே. எப்போதும் சுறுசுறுப்புடன் கடமையில் கவனம் செலுத்து.
* பாராட்டுவதோடு தக்க சமயத்தில் எச்சரித்து திருத்துவதும் உண்மையான நட்பின் இலக்கணம்.
-சாரதாதேவியார்